عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "مَنْ مات وهو يدعُو مِنْ دون الله نِدًّا دخَل النَّار".
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]
அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமான வணக்கங்களில் ஒன்றை வேறொருவருக்கு வழங்கி, அதிலேயே தொடர்ந்திருந்து, மரணித்தால் அவரின் தங்குமிடம் நரகமே என நபியவர்கள் இந்நபிமொழியில் எமக்கு அறிவிக்கின்றார்கள்.