+ -

عن أبي هنيدة وائل بن حجر رضي الله عنه : سأل سلمة بن يزيد الجعفي رسول الله صلى الله عليه وسلم فقال: يا نبي الله، أرأيت إن قامت علينا أمراء يسألونا حقهم، ويمنعونا حقنا، فما تأمرنا؟ فأعرض عنه، ثم سأله، فقال رسول الله صلى الله عليه وسلم : «اسمعوا وأطيعوا، فإنما عليهم ما حُمِّلُوا، وعليكم ما حُمِّلْتُم».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

ஸலமா இப்னு யஸித் அல் ஜஅபீ அவர்கள்,ரஸுல் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நமது தலைவர்கள் நம்மிடம் அவர்களின் உரிமைகளை கேட்கும் அதே சயம் அவர்கள் எங்களின் உரிமைகளைத் தர மறுத்து வந்தால் அது பற்றி எமக்குத் தாங்கள் விடுக்கும் கட்டளை யாது ? என்று கேட்டார்கள்.அதற்கு நபியவர்கள் "அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடவுங்கள்.ஏனெனில் அவர்களின் மீது சுமத்தப்பட்டது எதுவோ அதனை செய்வது அவர்களின் கடமை. உங்கள் மீது சுமத்தப்பட்டது எதுவோ அதனை செய்வது உங்களின் கடமை,"என்று ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுனைதா வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கினறார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

சில தலைவர்கள் குடிமக்களிட மிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை அவர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றனர் ஆனால் தாங்கள் குடி மக்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளை அவர்களுக்கு கொடுக்க மறுத்து வருவதுடன் அவர்களைக் கொடுமைப் படுத்தியும் வருகின்றனர்.எனவே அப்படியான தலைவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமா,அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமா?என்று ஸலமா இப்னு யஸீத் என்பார் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வினவினார்.அப்போது நபியவர்கள் இந்தப் பிரச்சினைப் பற்றிக் கேட்கவோ பேசவோ விரும்பாதவர்கள் போன்று அதனை பகிஷ்கரித்தார்கள்.எனினும் இதனை விசாரித்தவர் மீண்டும் இது பற்றிக் கேட்ட போது நபியவர்கள்,நாம் அவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைறேற்றுவோம் ஏனெனில் அவர்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேற்றுவது அவர்களின் கடமை.மேலும் நம்மீது சுமத்தப்பட்டிருப்பது எதுவோ அதனை நிறைவேற்றுவது நமது கடமை,எனவே அவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்றும்,அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்.மேலும் நம்மீது நீதியாக ஆட்சி புரிய வேண்டும் என்றும் எவருக்கும் அநீதி இழைக்கக் கூடாதென்றும்,அல்லாஹ் தன் அடியார்கள் மீது விதித்துள்ள தண்டனைகளை நிலை நிறுத்தி வைக்கும்படியும்,உலகில் அல்லாஹ்வின் ஷரீஆவை நிலை நிறுத்தும் படியும் அல்லாஹ்வின் எதிரிகளை எதிர்த்துப் போரிடும்படியும் அவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்,என்று ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ الأمهرية الهولندية الغوجاراتية النيبالية الرومانية الموري Урумӣ
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு