عن أبي مسعود رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم بناقة مَخْطُومَةٍ، فقال: هذه في سبيل الله، فقال رسول الله صلى الله عليه وسلم : «لك بها يوم القيامة سبعمائة ناقة كلها مخطومة».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

ஒரு மனிதன் ரஸுல் (ஸல்) அவர்களிடம் கடிவாளம் இடப்பட்ட ஒட்டகம் ஒன்றை எடுத்து வந்து இதனை அல்லாஹ்வின் பாதையில் விடுகின்றேன்,என்றார் அதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் "இதற்குப் பகரமாக நாளை மறுமை நாளில் எழுநூறு ஒட்டகம் உங்களுக்குக் கிடைக்கும்,அவை அனைத்தும் கடிவாளம் இடப்பட்டிருக்கும்"என்று நபியவர்கள் கூறினார்கள்,என அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் விடயத்திற்கு இந்த ஹதீஸ் ஆர்வமூட்டுகிறது.குறிப்பாக அல்லாஹ்வின் பாதையில் அறப் போரில் ஈடுபட உதவியாக இருக்கும் குதிரை ஒட்டகம் போன்ற சாதனங்களை தர்மம் செய்வதன் சிறப்பு இதில் குறிப்பிடப்பட்டுள்து.இவ்வாறு அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும் தர்மத்தின் கூலி ஒன்றுக்கு எழுநூறு என்ற அடிப்படையில் பண்மடங்காக ஆக்கித் தரப்படும்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு