عن سعد بن عبادة رضي الله عنه أنه قال:
يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ، فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟، قَالَ: «الْمَاءُ»، قَالَ: فَحَفَرَ بِئْرًا، وَقَالَ: هَذِهِ لِأُمِّ سَعْدٍ.

[حسن بمجموع طرقه] - [رواه أبو داود والنسائي وابن ماجه] - [سنن أبي داود: 1681]
المزيــد ...

ஸஃத் இப்னு உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதரே! ஸஃத் (ரழி அவர்களின் தாயார் இறந்துவிட்டார். எனவே (அவளுக்காக) வழங்குவதற்கு மிகச் சிறந்த தர்மம் எது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தண்ணீர்.' என்றார்கள் எனவே ஸஃத் ஒரு கிணற்றைத் தோண்டி, 'இது ஸஃத்தின் தாய்க்கு' என்றார்.

[ஒட்டுமொத்த வழிகள் ஊடாக நம்பகமாக மாறியது (ஹஸன்)] - [இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது] - [ஸுனன் அபூ தாவூத் - 1681]

விளக்கம்

ஸஃத் இப்னு உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் இறந்தபோது, ஸஃத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தனது தாய்க்கு வழங்கக்கூடிய சிறந்த தர்மம் எது என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தண்ணீர் கொடுப்பதே சிறந்த தர்மம் என்று பதிலளித்தார்கள். அவர் தனது தாய்க்காக ஒரு கிணற்றைத் தோண்டி அதனை தர்மமாக வழங்கினார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நீர் மிகச் சிறந்த தர்மங்களில் ஒன்றாகும் என தெளிவு படுத்தப்பட்டிருத்தல்.
  2. நபி ஸல்லல்லாஹு அவர்கள ஸஃத் ரழியல்லாஹு அவர்களுக்கு நீரை தர்மமாக வழங்குமாறு அறிவுறுத்தினார்கள். ஏனெனில் அது உலக மற்றும் மறுமை விஷயங்களில் மிகவும் பிரயோஜனமலிக்கும் பொருளாகும். வெப்பத்தின் கடுமை, தண்ணீரின் தேவை, தண்ணீர் கிடைக்காதது (தட்டுப்பாடு) ஆகியவை அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கின்றன.
  3. தர்மங்களின் நன்மைகள் இறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை இந்த ஹதீஸ் காட்டுகின்றமை.
  4. ஸஃத் இப்னு உபாதா – ரழியல்லாஹு அன்ஹு அவர்க்ள - தனது தாயாருக்கு செய்த உபகாரத்தை இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றமை.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது இந்தோனேஷியன் மேலதிக விபரங்களுக்கு (49)
மேலதிக விபரங்களுக்கு