ஹதீஸ் அட்டவணை

'அயலவரும் வாரிசுதாரராக ஆகி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அயலவர் -அண்டைவீட்டார் குறித்து எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நேர்ச்சை செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். நோர்ச்சையானது (அல்லாஹ் விதித்தவை தவிர) எந்த நன்மையையும் கொண்டு வரமாட்டாது. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை)
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில் நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாதே! என்று கூறினார்கள். ஆகவே, நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (திரும்பவும்) சென்று, அவர்களுக்கு அதை நினைவு படுத்தினோம். அப்போது அவர்கள், 'நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை; மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனிமேல் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்து விடுவேன்' என்று சொன்னார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீத்தம் பழத்திற்குப் பேரீத்தம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
தங்கம் மற்றும் வெள்ளியை வைத்துக் கொண்டிருக்கும் யாராக இருப்பினும், அதில் நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றா விட்டால், நெருப்பினால் ஆன இரும்புப் பாளங்கள் அவருக்காக உருவாக்கப்பட்டு, அவை நரக நெருப்பில் சூடு காட்டப்படும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்அஷ்அரீ கோத்திரத்தார் யுத்த களத்தில் இருக்கும் போது அல்லது மதீனாவில் தங்களின் குடும்பத்தாரிடையே உணவு பற்றாக்குறை ஏற்படும் போது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது