عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«مَا زَالَ يُوصِينِي جِبْرِيلُ بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6014]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'அயலவரும் வாரிசுதாரராக ஆகி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அயலவர் -அண்டைவீட்டார் குறித்து எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 6014]
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்டை வீட்டார் குறித்து கரிசனை செலுத்துமாறு கட்டளைப் பிரப்பித்து, அதனை பற்றி பல முறை தொடர்ந்து தனக்கு கூறியவண்ணம் இருந்தார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். அண்டை வீட்டார் என்பவர் எமக்குப் பக்கத்தில் வாழும் முஸ்லிமோ காபிரோ உறவினர்களோ அல்லது உறவினர் அல்லாதாரோ அனைவரையும் குறிக்கும். இவர்களின் உரிமையை காத்து, அவர்களுக்கு தொந்தரவு செய்யாது, அவர்களுக்கு உபகாரம் செய்து, அவர்களால் ஏற்படுகின்ற தொந்தரவுகளை சகித்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களுக்கு அண்டை வீட்டார் உரிமைப் பற்றியும் அதன் மேன்மையையும் வலியுறுத்திக் கூறியது ஒருவர் தனது மரணத்திற்குப் பின் விட்டுச்செல்லும் சொத்தில் அவருக்கும் பங்கு உண்டு என நினைக்குமளவிற்கு இருந்தாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.