عَنْ أبي سَعيدٍ الخُدريَّ رضي الله عنه قال: قال رسولُ الله صلَّى الله عليه وسلم ِ:
«إزْرَةُ المُسْلمِ إلى نصفِ السَّاق، وَلَا حَرَجَ -أو لا جُنَاحَ- فيما بينَهُ وبينَ الكعبينِ، وما كان أسفلَ منَ الكعبين فهو في النار، مَن جرَّ إزارَهُ بطرًا لم يَنْظُرِ اللهُ إليه».
[صحيح] - [رواه أبو داود وابن ماجه وأحمد] - [سنن أبي داود: 4093]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒரு முஸ்லிமின் கீழ் ஆடை கணுக்காலின் பாதியளவு இருக்கும். அதில் இருந்து இரு கரண்டைக் கால் வரை (செல்வது) குற்றமில்லை. இரு கரண்டைக் காலுக்கும் கீழால் செல்வது நரகத்திற்கே உரியது. யார் பெருமைக்காக தனது கீழ் ஆடையை இழுத்துக்கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
[சரியானது] - [இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது] - [ஸுனன் அபூ தாவூத் - 4093]
மனிதர்களின் உடம்பின் கீழ் அரைப் பகுதியை மறைக்கும் (வேட்டி போன்ற) ஆடைகளுக்கு மூன்று நிலைகள் இருப்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள் முதலாவது : அரைக்கணுக்கால் வரை இருப்பதுவே விரும்பத்தக்கதாகும். இரண்டாவது : வெறுக்கப்படாமல் அனுமதிக்கப்படும் நிலை. அதாவது, பாதத்தையும் கணுக்காலையும் பிரிக்கும் கரண்டைக் கால் வரை இருத்தல். மூன்றாவது : தடுக்கப்பட்ட நிலை; அதாவது, கரண்டைக்காலுக்குக் கீழாக இருத்தல். இவரை நரக நெருப்புத் தீண்டலாம். அகம்பாவம், பெருமை மற்றும் கருவத்துடன் அவ்வாறு செய்திருந்தால், அல்லாஹ் அவரைப் பார்க்கமாட்டான்.