عن أبي هريرة عبدالرحمن بن صخر الدوسي رضي الله عنه مرفوعاً: .«قال الله تعالى: أنفق يا ابن آدم ينفق عليك».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா அப்துர்ரஹ்மான் இப்னு ஸஹ்ர் அல் தௌஸீ (ரலி) கூறுகின்றார்கள் : "ஆதமின் மகனே! நீர் செலவு செய். உமக்கு செலவிடப்படும். என்று அல்லாஹ் கூறினான்".
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
"செலவு செய் உம்மீது செலவிடப்படும்" அதாவது செலவு செய்வதன் மூலம், பணத்தை வெளியற்றுவதன் மூலம் வறுமை வந்து விடும் என்று பயப்படாதே. மேலும் கஞ்சனாக ஆகிவிடாதே. நீ மற்றவருக்கு தர்மம் செய்தால் அல்லாஹ் உனக்கு வாரி வழங்குவான். ஏனெனில் உங்களிடம் இருப்பது தீர்ந்து போகும். அல்லாஹ்விடம் இருப்பது நிலைத்திருக்கும். மேலும் இந்த ஹதீஸ் "நீங்கள் எதை தானம் செய்த போதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான்" (34:39) எனும் இறை வாக்கின் கருத்தைக் கொண்டுள்ளது. இவ்வாறு நல்ல கருமங்களில் செலவு செய்யும் படி இந்த ஹதீஸ் மக்களைத் தூண்டுகின்றது. மேலும், அதற்கு அல்லாஹ்வின் அருள் மூலம் பிரதி வழங்கப்படும் என்ற சுப செய்தியையும் அது உள்ளடக்கியுள்ளது.