عَنْ أَبِي ذَرٍّ رضي الله عنه:
أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللهِ، ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ، قَالَ: «أَوَلَيْسَ قَدْ جَعَلَ اللهُ لَكُمْ مَا تَصَّدَّقُونَ؟ إِنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً، وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً، وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً، وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ، وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ»، قَالُوا: يَا رَسُولَ اللهِ، أَيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ؟ قَالَ: «أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ؟ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1006]
المزيــد ...
அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் சிலர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதரே! அதிகம் செல்வமுள்ளவர்கள் மிகுந்த நற்கூலியை சம்பாதித்துச் சென்றார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு நோற்பது போலவே நோன்பு அவர்களும் நோற்கிறார்கள் இன்னும் அவர்கள் தங்களது தேவைக்கு மிகுதியாக உள்ள செல்வத்திலிருந்து தர்மமும் செய்கிறார்கள். அதற்கு இறைத்தூதர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் : "அல்லாஹ் ' உங்களுக்கும் தர்மம் செய்யக் கூடியவற்றை அருளவில்லையா?" ஒவ்வொரு 'தஸ்பீஹும்'; (ஸுப்ஹானல்லாஹ்) ஒரு தர்மமாகும் (ஸதகாவாகும் ). ஒவ்வொரு தக்பீரும்' (அல்லாஹு அக்பர்) ஒரு ஸதகாவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) ஒரு ஸதகாவாகும்.ஒரு நன்மையை ஏவுவதும் ஸதகா. ஒரு தீமையை தடுப்பதும் ஸதகா. உங்கள் மனைவியரோடு உடலுறவுகொள்வதும் ஸதகா. அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் இச்சையை நிறைவு செய்ய வருகிறார் அதற்கும் அவருக்கு நற்கூலி உண்டா ? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 'அதனை ஹராமான வழியில் தீர்த்தால் அவருக்கு பாவமுண்டென கருதுகின்றீர்களா? அவ்வாறே அதனை ஹலாலான முறையில் தீர்த்துக்கொண்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு.' " என்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 1006]
ஏழை ஸஹாபாக்காளில் சிலர் நபியவர்களிடம் தமது நிலை குறித்தும் வறுமை பற்றியும் முறையிட்டதோடு, வசதிபடைத்தோர்; தங்களது செல்வத்தின் மூலம் அடைந்து கொள்ளும் அதிக நன்மைகள் போல் தம்மால் அடைந்து கொள்ள முடியவில்லையென்றும், தர்மம் செய்யவோ அவர்களைப் போன்று நன்மைகள் செய்வதற்கு முடியவில்லை என்று முறையிட்டார்கள். அதாவது அவர்களும் எங்களைப் போன்று தொழுது நோன்பு நோற்கிறார்கள். அத்துடன் அவர்களின் செல்வத்தில் எஞ்சியதிலிருந்து தரம்மமும் கொடுக்கிறார்கள். ஆனால் நாம் ஏழை என்பதால் எம்மால் தர்மம் செய்ய முடிவில்லை என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் அவர்களுக்கு செய்வதற்கு இயலுமான பல்வகையான தர்மம் குறித்து வழிகாட்டினார்கள் . நபியவர்கள் கூறினார்கள் : நீங்கள் தர்மம் செய்யக்கூடியதை அல்லாஹ் உங்களுக்கு வழங்கவில்லையா?! என்று கேட்டுவிட்டு, (சுப்ஹானல்லாஹ்) (அல்லாஹ் தூயவன்) என்று கூறுவதும் ; (அல்லாஹு அக்பர்) (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறுவதும் தர்மமாகும்; (அல்ஹம்துலில்லாஹ்) (லாஇலாஹஇல்ல்லாஹ); (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவதும் தர்மமாகும். (நன்மையை ஏவுவது) தர்மமாகும், (தீமையைத் தடுப்பது) தர்மமாகும், உங்களில் ஒருவர் தனது மனைவியுடன் உடலுறவு கொள்வதும்;, தர்மமாகும் என்று கூறியபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டு, 'அல்லாஹ்வின் தூதரே, நம்மில் ஒருவர் தனது ஆசையை தீர்த்துக் கொள்வதற்கும் கூலியைப் பெறுகிறாரா?' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் : 'விபச்சாரம் போன்ற தடைசெய்யப்பட்ட வழியில் அல்லது வேறு வழியில் அதை நிறைவேற்றினால், அவர் பாவத்திற்கு ஆளாவார் என்பதை நீங்கள் அறியவில்லையா? அதேபோல், அவர் அதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்ட்ட முறையில் நிறைவேற்றினால், அவருக்கு ஒரு கூலி கிடைக்கும்.!