உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு "இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று கூறினார். உடனே வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்;பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அது மன்னிக்கப்பட்டு விடும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யார் ஒருவர்; "லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலகு லஹுல் முல்கு வலஹு ஹம்து வஹுவ அலா குல்லிச் சைஇன் கதீர்" என 10 தடவைக் கூறினால் அவர் இஸ்மாஈல் (அலை) அவர்களின் சந்ததியிலிருந்து நான்கு அடிமைகளை உரிமையிற்றவரைப் போன்றவராவார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
என்றும் நிலைத்திருக்கும் நல்லமல்கள்لَا إلَهَ إلَّا اللَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاَللَّهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ எனும் வாசகங்களாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
எனது ஆன்மாவை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இறைவனை நினைவு கூர்வதிலேயே தொடரந்தும் இருந்தால் உங்கள் படுக்கையிலும் உங்கள் வழிகளிலேயும் வானவர்கள் கைகொடுத்து மகிழ்வார்கள்.எனினும் ஹன்ளலாவே! வணக்குக்கு என ஒரு நேரம் உண்டு, வாழ்க்கைக்கு உழைப்பதற்கு என்று ஒரு நேரம் உண்டு.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது