عن عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ رضي الله عنه:
أنه أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ الشَّيْطَانَ قَدْ حَالَ بَيْنِي وَبَيْنَ صَلَاتِي وَقِرَاءَتِي يَلْبِسُهَا عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَاكَ شَيْطَانٌ يُقَالُ لَهُ خِنْزَِبٌ، فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذْ بِاللهِ مِنْهُ، وَاتْفُلْ عَلَى يَسَارِكَ ثَلَاثًا»، قَالَ: فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَهُ اللهُ عَنِّي.

[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

உஸ்மான் இப்னு அபில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஷைத்தான் எனக்கும் எனது தொழுகைக்குமிடையில் குறுக்கிட்டு எனது ஓதலை குழப்புகிறான் என்று கூறிய போது, நபியவர்கள்; "அவன்தான் ஹின்ஸப் எனப்படும் ஷைத்தான், அவன் குழப்புவதை நீர் உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிவிட்டு, உமது இடது பக்கத்தில் மூன்று விடுத்தம் துப்பிவிடு. என்று கூற. நான் அவ்வாறே செய்தேன்,அல்லாஹ் அவனை விட்டும் என்னை காப்பாற்றி விட்டான்.என்று கூறினார்கள்.

ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

உஸ்மான் இப்னு அபில்-ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே, ஷைத்தான் எனக்கும் எனது தொழுகைக்கும் இடையே குறுக்கா நின்று அதில் பக்தியுடன்; தொழுவதை தடுக்கிறான் . இதனால் அல்குர்ஆன் ஓதுவது குழம்புகிறது. அதில் சந்தேகமும் ஏற்படுகிறது' என்று கூறினார் அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவன்தான் கின்ஸப் என்று அறியப்பட்ட ஷைத்தான். நீங்கள் கூறியவாறு இவ்வாறான ஊசாட்டங்களை நீங்கள் உணர்ந்தால், அவனிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்,உங்கள் இடதுபுறத்தில் மூன்று முறை துப்பவும் என்று கூறினார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியது போன்று செய்தேன் அல்லாஹ் என்னை விட்டும் ஷைத்தானை அகற்றிவிட்டான் என்று உஸ்மான் அவர்கள் கூறுகிறார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஷைத்தான் தொழுகையில் குழப்பத்தையும்,சந்தேகத்தையும் ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபடுவதால் தொழுகையில் பணிவு மற்றும் பக்தியுடன் மெய்நிலையில் தொழுவதன் அவசியம் தெளிவுபடுத்தப்பட்டிருத்தல்
  2. தொழுகையில் ஷைத்தானின் மனஊசாட்டம் ஏற்பட்டால் இடது பக்கத்தில் மூன்று முறை துப்பி பாதுகாப்புத் தேடுவது நபி வழிமுறையாகும்.
  3. ஸஹாபாக்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள நபியவர்களிடம் வந்தமை பற்றிய விபரம் இந்த ஹதீஸில் காணப்படுகின்றமை.
  4. நபித்தோழர்களின் உள்ளங்கள் உயிரோட்டமானவை, அவர்களின் முழு முயற்சியும் மறுமை நோக்கியதாகவே இருக்கும்.
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு