عن حُذَيْفَةَ رضي الله عنه:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي».

[صحيح] - [رواه أبو داود والنسائي وابن ماجه وأحمد]
المزيــد ...

ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருந்தார்கள்.(பொருள் : எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பளிப்பாயாக, எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பளிப்பாயாக)

ஸஹீஹானது-சரியானது - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, என்ற இஸ்திஃபாரை மீண்டும் மீண்டும் கூறுபவர்களாக இருந்தார்கள்
'ரப்பிஃபிர்லீ, என்பது : அடியான் தனது இரட்சகனிடம் தனது பாவத்தை அழித்துவிடுமாறும் குறைகளை மன்னித்து விடுமாறும் இறைஞ்சுவதைக் குறிக்கும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இந்த துஆவை பர்ழ் மற்றும் நப்லான தொழுகையில் இரு ஸஜ்தாவுக்கு மத்தியில் ஓதுவது மார்க்க வழிகாட்டலாகும்.
  2. 'ரப்பிஃபிர்லீ, என்ற வார்;த்தை இரு தடவைகள் கூறுவது முஸ்தஹப்பாகும் அதனை ஓரு தடவை மாத்திரம் கூறுவது கட்டாயமாகும்.
மேலதிக விபரங்களுக்கு