عَنْ وَرَّادٍ كَاتِبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: أَمْلَى عَلَيَّ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فِي كِتَابٍ إِلَى مُعَاوِيَةَ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ: «لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 844]
المزيــد ...
முகீரதுப்னு ஷுஃபாவின் எழுத்தாளர் வர்ராத் கூறுகிறார்: முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் முகீரதுப்னு ஷுஃபா எனக்கு எழுதுமாறு பின்வரும் ஹதீஸை குறிப்பிட்டார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகை முடிந்ததும் பின்வருமாரு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லிஷைஇன் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதய்த்த, வலா முஃதிய லிமா மனஃத்த, வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து .(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவராலும் கொடுக்கவும் முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் உன்னிடம் பயன் அளிக்காது)
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 844]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகையைத் தொடர்ந்து : 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லிஷைஇன் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதய்த்த வலா முஃதிய லிமா மனஃத்த வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து என கடமையான தொழுகைக்குப் பிறகு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இந்த திக்ரின் கருத்து : லாஇலாஹ இல்லல்லாஹு என்ற ஏகத்துவ வார்த்தையை உளப்பூர்வமாக ஏற்று அங்கீகரிக்கிறேன். உண்மையான வணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது என்று உறுதிப்படுத்துவதோடு, அவனைத் தவிர உள்ளவற்றிற்கு வழிபாடு எதுவும் இல்லை என்றும் கூறுகிறேன். எனவே உண்மையாக வணங்கப்பட வேண்டியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. உண்மையான அரசாட்சி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளோரின் அனைத்து புகழாரங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் எல்லாவற்றிலும் சக்தி படைத்தவனாக உள்ளான் எனவே அவன் நாடி கொடுத்தவற்றை அல்லது தடுத்தவற்றை எவராலும் தடுத்திட முடியாது. மேலும் செல்வந்தனின் செல்வம் மறுமையில் எவ்விதப்பயனையும் தரமாட்டாது அவனின் நல்லமல்கள் மாத்திரமே அவனுக்கு நற்பயனளிக்கும்.