عن عبد الله بن الزبير -رضي الله تعالى عنهما- أنّه كانَ يقول: في دبر كل صلاة حين يُسلِّم «لا إله إلا الله وحده لا شريكَ له، له الملك وله الحمد وهو على كل شيءٍ قديرٌ، لا حولَ ولا قوةَ إلا بالله، لا إله إلا الله، ولا نعبد إلا إيَّاه، له النِّعمة وله الفضل، وله الثَّناء الحَسَن، لا إله إلا الله مخلصين له الدِّين ولو كَرِه الكافرون» وقال: «كان رسول الله صلى الله عليه وسلم يُهَلِّل بهن دُبُر كلِّ صلاة».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகையிலும் ஸலாம் கொடுத்ததும் பின்வருமாறு ஓதுவார்கள் : "லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ லஹுல்முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலாகுல்லிஷைஇன் கதீர், லாஹெளல வலாகுவ்வத இல்லாபில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹு வலாநஃபுது இல்லாஇய்யாஹு லஹுந்நிஃமது வலஹுல் பழ்லு வலஹுஸ்ஸனாஉல் ஹஸன். லாஇலாஹ இல்லல்லாஹு முஃலிஸீன லஹுத்தீன வலௌ கரிஹல் காபிரூன்". மேலும் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இதனை ஓதுவார்களெனக் கூறினார்கள். பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை, துணை எதுவுமில்லை, அரசாட்சி அனைத்தும் அவனுக்கே உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத்தவிர வேறெவரையும் நாங்கள் வணங்கமாட்டோம். அருள் அவனுடையது. உபகாரம் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. நிராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

கடமையான தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்ததும் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் இந்த மகத்தான திக்ரை ஓதுவார்கள். உண்மையான அடிமைத்தனத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் நிலைநிறுத்துதல், அவனுக்கு இணைகள் இருப்பதை மறுத்தல், உள்ரங்கமான, வெளிப்படையான ஆட்சியதிகாரம் அவனுக்கு மாத்திரம்தான், அனைத்து நிலைகளிலும் புகழனைத்துக்கும் சொந்தக்காரன், பொதுவான வல்லமை அவனுக்கு மாத்திரம்தான் உள்ளது போன்றவற்றை உறுதிப்படுத்துதல், தனது இயலாமை, அலட்சியம், அவனது வல்லமை, திரும்புதல் என்பவற்றிலிருந்து விலகுதல் என்பவற்றை அடியான் ஏற்றுக் கொள்ளல், தீங்கைத் தடுக்கும் சக்தியோ, நன்மையைச் செய்யும் ஆற்றலோ அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்குமில்லை என்பதை ஏற்றுக் கொள்ளல் போன்ற பல மகத்தான அர்த்தங்களை மேற்கண்ட திக்ரு பொதிந்துள்ளது. அத்துடன் அருட்கொடைகளை அவற்றை வழங்குபவனுக்கு சேர்த்துதல், தனது உள்ளமை, பண்புகள், செயல்கள், அருட்கொடைகள், அனைத்து நிலைகளிலும் அவனுக்கே முழுமையான பரிபூரணத்துவம், அழகான புகழுரைகள் உள்ளன என்பதையும் இந்த அழகிய திக்ரு உள்ளடக்கியுள்ளது. பின் அனைத்து காபிர்களும் வெறுத்தாலும் உண்மையான வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் மாத்திரம்தான் என்ற திருக்கலிமாவை நினைவூட்டி இந்த திக்ரு முடிக்கப்பட்டுள்ளது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்ததும் இந்த திக்ருகளை மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் விதத்தில் குரலை உயர்த்திக் கூறுவார்கள் என அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) கூறுகின்றார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்வின் பரிபூணத்துவத்தை வர்ணிக்கும் இந்த திக்ருகளை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பேணி ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
  2. இந்த மார்க்கத்தின் அடிப்படை உளத்தூய்மையும், நபிவழியைப் பின்பற்றுவதுமாகும். அவ்விரண்டும்தான் இஸ்லாத்தின் இரு கால்களாகும்.
  3. ஸுன்னாவை அமுல்படுத்துவதிலும், அதனைப் பரப்புவதிலும் நபித்தோழர்களின் ஆர்வம் இங்கு புலப்படுகின்றது.
  4. காபிர்கள் வெறுத்தாலும் ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தைக் கொண்டே பெருமையடைந்து, அதன் அடையாளச் சின்னங்களை வெளிப்படுத்த வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு