عن ثَوْبَانَ رضي الله عنه قال:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا، وَقَالَ: «اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ»، قَالَ الْوَلِيدُ: فَقُلْتُ لِلْأَوْزَاعِيِّ: كَيْفَ الْاسْتِغْفَارُ؟ قَالَ: تَقُولُ: أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ.
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 591]
المزيــد ...
ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் 'அஸ்தஃபிருல்லாஹ்' (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று மூன்று தடவைகள் கூறி விட்டு பின்வரும் திக்ரை ஓதுவார்கள் : 'அல்லாஹும்ம அன்தஸ் ஸலாமு, வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி'.' (பொருள்) யா அல்லாஹ்: நீ ஈடேற்றமானவன், உன் மூலமே ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியமும் மான்பும் உடையவனே, நீ உயர்ந்தோனாய் உள்ளாய்) வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்களிடம் இஸ்திபார் செய்வது எப்படி என வினவினேன், அதற்கு அவர்கள் 'அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' என்று நீ கூற வேண்டும் என்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 591]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் 'அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' என மூன்று தடவைகள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
பின்னர் அவர்கள் தனது இரட்சகனை 'அல்லாஹம்ம அன்தஸ் ஸலாமு, வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி' என்ற கூற்றினால் மகத்துவப்படுத்தினார்கள். இங்கு அஸ்ஸலாம் என்பது அல்லாஹ் தனது பண்புகளில் பரிபூரண சாந்தியளிப்பவன், எல்லாவகையான குறைகளை விட்டும் தூய்மையானவன் என்பதாகும். அவனிடமிருந்தே இம்மை மறுமையின் தீங்குகளைவிட்டும் ஈடேற்றத்தை கோர வேண்டும். வேறு யாரிடமும் அதனை தேடக்கூடாது. அவன் தூயவன் அவனிடமே இம்மை மறுமையின் நலன்கள் யாவும் பெருகிக்கிடக்கிறது. அவனே மகத்துவம் மற்றும் உபகாரம் போன்ற பண்புகளின் சொந்தக்காரனாவான்.