عن أنس بن مالك رضي الله عنه قال:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا.
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2310]
المزيــد ...
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதரில் நல்லொழுக்கம்(நற்குணம்); மிக்கவராக இருந்தார்கள்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 2310]
மனிதர்களில் நல்லொழுக்கத்தில் பரிபூரணமானவர்களாகவும் ஒழுக்க சீலராகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்தார்கள். அழகிய வார்த்தை பேசுதல், நன்மை செய்தல், முகமலர்ச்சியுடன் இருத்தல், (இன்முகம்),மற்றவருக்கு தொல்லை கொடுக்காது இருத்தல், பிறரின் அசௌகரியாமான நடவடிக்கைளை தாங்கிக் கொள்ளல் போன்ற அனைத்து அழகிய குணங்களுக்கும், பண்பாடுபாடுகளுக்கும் முன்னுதாரணமாக அவர்களே திகழ்ந்தார்கள். இதில் அவர்களை முந்தியவர்கள் யாரும் கிடையாது.