قال سعد بن هشام بن عامر -عندما دخل على عائشة رضي الله عنها-:
يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَنْبِئِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: أَلَسْتَ تَقْرَأُ الْقُرْآنَ؟ قُلْتُ: بَلَى، قَالَتْ: فَإِنَّ خُلُقَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ الْقُرْآنَ.
[صحيح] - [رواه مسلم في جملة حديثٍ طويلٍ] - [صحيح مسلم: 746]
المزيــد ...
ஸஃத் இப்னு ஹிஷாம் இப்னு ஆமிர் அவர்கள் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள் :
விசுவாசிகளின் தாயே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடுகள் பற்றி எனக்கு அறிவித்துத்தாருங்கள் என்று கேட்டதற்கு ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா 'நீர் அல்குர்ஆனை ஓதுவதில்லையா?' என வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அதற்கு அவர்கள்; 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடு அல் குர்ஆனாகவே இருந்தது' என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - - [صحيح مسلم - 746]
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அவர்களின் பண்பாடு குறித்து வினவப்பட்டபோது அவர்கள் மிகவும் சுருக்கமானதும் பொருட்செரிவுமிக்கதுமான ஒரு பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவரை எல்லா முழுமையான பண்புகளையும் நிறைவாகக் கொண்ட அல்குர்ஆனின் பக்கம் அவரின் அவதானத்தைத் திருப்பியதோடு, நபியவர்கள் அல்குர்ஆன் குறிப்பிடும் பண்பாடுகளை கடைப்பிடித்து ஒழுகினார்கள் எனப் பதிலளித்தார்கள். அதாவது அல்குர்ஆன் ஏவியவற்றை நிறைவேற்றினார்கள். அல்குர்ஆன் தடுத்தவற்றை தவிர்ந்திருந்தார்கள். அவர்களின் பண்பாடு அல்குர்ஆன் குறிப்பிடுபவற்றை நடைமுறைப்படுத்துவதும், அதன் வரையறைகளைப் பேணி நடப்பதும், அது கூறும் நற்பண்புகளை கடைப்பிடித்து ஒழுகுவதும், அது (அல்குர்ஆன்) கூறும் கதைகள் மற்றும் உதாரணங்களினால் படிப்பினை பெறுவதும் அவர்களின் பண்பாடாக இருந்தது.