عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6]
المزيــد ...
இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில், நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்தி கற்றுக் கொடுப்பார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 6]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர், மேலும் ரமளான் மாதத்தில் அவரது தாராள மனப்பான்மை இன்னும் அதிகமாக இருந்தது. அவர் வேண்டியவர்களுக்கு தாராளமாக கொடுப்பார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன:
1- ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்தமை.
2- குர்ஆனை மீட்டுவது, அதாவது அல் குர்ஆனை மனப்பாடத்தில் ஓதுவதை மறுபரீசீலனை செய்வது.
அல்குர்ஆனில் அந்நேரம் வரை இறக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதியோடு அதனை நபியவர்களுடன் மறுபரிசீலனை செய்தார்கள். இந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் மழையுடனும் கருணையுடனும் அனுப்பும் இனிமையான காற்றை விட, மக்களுக்கு மிகவும் தாராளமாகவும், கனிவாகவும், வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.