ஹதீஸ் அட்டவணை

இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க) இரவில் நின்று வங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மகனின் அமல்கள் அனைத்தும் அவனுக்குரியதாகும். நோன்பைத் தவிர. ஏனெனில் அது எனக்குரியதாகும். அதற்கு நானே கூலி வழங்குவேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி (ஸல்) அவர்கள் இறுதி பத்துத் தினங்களிலும் ஏனைய தினங்களில் இல்லாத அளவு முயற்சிப்பார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
எனது உற்ற தோழர், முஹம்மத் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விடயங்களைக் கொண்டு உபதேசம் செய்தார்கள். 1.ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல். 2. இரண்டு ரக்அத்கள் ழுஹாத் தொழுதல். 3. உறங்குவதற்கு முன்னர் வித்ர் தொழுதல்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நீங்கள் அதை (பிறையைக்) கண்டால் நோன்பு பிடியுங்கள். அதைக் கண்டால் நோன்பு விடுங்கள். உங்களுக்கு அது மறைக்கப்பட்டால், அதைக் கணக்கிட்டுக் (30 ஆக பூரணப்படுத்திக்) கொள்ளுங்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
''யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில், நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ரின் சகோதாரன்' என்றும் கூறினார்'' என அனஸ் இப்னு மாலிக்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேளையில் ஒருவர் நோன்பு வைத்தால்,வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போல்,அல்லாஹ்அவருக்கும் நரகத்துக்குமிடையே தூரமாக்கி வைப்பான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
“இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.”
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நோன்பு திறப்பதை (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் (நலவிலே) நிலைத்திருக்கிறார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நாம் அல்லாஹ்வின் தூதரோடு ஸஹ்ர் செய்தோம். பின்னர் அவர்கள் தொழுகைக்காக சென்றார்கள். நான் ஸைதிடம் அதானுக்கும் ஸஹ்ர் உணவுக்குமிடையில் எவ்வளவு இடைவெளி இருந்ததென கேட்டேன். அதற்கு ஐம்பது ஆயத்துக்கள் அளவு என்றார்கள் என அனஸ் அறிவிக்கிறார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
“நபியவர்கள் மரணிக்கும் வரையில் ரமழானில் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களது மனைவியர் இஃதிகாப் இருந்தார்கள்”
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஸஹ்ர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பறக்கத் (அபிவிருத்தி) இருக்கிறது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ரமழானுக்கு ஒரு நாள் முந்தியோ இரண்டு நாட்களுக்கு முந்தியோ உங்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம்; (அந் நாட்களில் வழக்கமாக) நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்!
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நான் ஒரு பெருநாளில் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண்ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ரமழானின் இறுதிப்பத்தில ஒற்றைப்படையான இரவுகளில்; 'லைலத்துல் கத்ர்' இரவைத் தேடிக்கொள்ளுங்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறுதி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் எனது கனவுடன் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமழானின்) இறுதி ஏழு (இரவு)களில் தேடிக் கொள்ளட்டும்!' என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஆஇஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: (ரமழானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி(வழிபாடுக்கு ஆயத்தமாகி)விடுவார்கள்; இரவில் (இறைவனை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத் தாரை எழுப்பிவிடுவார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ரமழான் வந்துவிட்டால், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். நரகத்தின் வாயில்கள் மூடப் பட்டுவிடும். ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு விடுவர்.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது