عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «من قام ليلة القَدْر إيمَانا واحْتِسَابًا غُفِر له ما تَقدم من ذَنْبِه».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் :"இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க) இரவில் நின்று வங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்".
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
லைலதுல் கத்ர் இரவின் சிறப்பு பற்றியும், அதனைப் பயன்படுத்துவதைத் தூண்டியும் இந்நபிமொழி வந்துள்ளது. இறைநம்பிக்கையுடன், அவ் இரவு பற்றி இடம்பெற்றுள்ள சிறப்புகளை நம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் செய்வதன் மூலம் உள்ளச்சத்திற்கு முரண்படும் முகஸ்துதியை நாடாமல் அல்லாஹ்வின் நன்மையை எதிர்பார்த்து அவ் இரவில் நின்று வணங்கினால் அவரது அனைத்து சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. பெரும்பாவங்கள் அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அவனிடம் தவ்பாச் செய்து மீள வேண்டும். அடியார்களின் உரிமைகளுடன் தொடர்பு பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்புக் கோறி விட்டு, அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து மீள வேண்டும்.