عَنْ جَابِرٍ رَضيَ اللهُ عنهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ قَالَ: سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ، غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ».
[صحيح] - [رواه الترمذي] - [سنن الترمذي: 3464]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
யார், 'ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ' (மகத்துவம் மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் புகழ்கின்றேன்.) என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனத்தில் ஒரு ஈத்தம்பழ மரம் நட்டப் படும்.
[صحيح] - [رواه الترمذي] - [سنن الترمذي - 3464]
இங்கு நபியவர்கள், யார், 'மகத்தான (அதாவது தன்னிலையிலும், பண்புகளிலும், செயற்களிலும் மகத்தானவனாக உள்ள) அல்லாஹ்வைத் துதிக்கின்றேன் (அதாவது தூய்மைப் படுத்துகின்றேன்) மேலும் அவனைப் புகழுகின்றேன் (அதாவது பரிபூரணத்துவப் பண்புகளை இணைத்த நிலையில்)' என்று கூறுகின்றாரோ, அவருக்கு அவர் கூறும் ஒவ்வொரு தடவையும், சுவனபூமியில் ஒரு ஈத்தம்பழ மரம் நட்டப்படும் என்று அறிவிக்கின்றார்கள்.