عن أَبِي مُوسَى الأَشْعَرِيِّ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:
«مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ»
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 574]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
(ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 574]
பஜ்ர் மற்றும் அஸ்ர் ஆகிய குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளில் ஆர்வம் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவுருத்துகிறார்கள். இவ்விரு தொழுகைகளையும் உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் உரிய முறையில் ஒருவர் நிறைவேற்றி வந்தால் அவர் சுவர்க்கம் பிரவேசிக்க இத்தொழுகைகள் காரணமாக அமையும் என்ற நட்செய்தியை கூறுகிறார்கள்.