عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «من صَام رمضان إيِمَانًا واحْتِسَابًا، غُفِر له ما تَقدَّم من ذَنْبِه».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் :"இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்.".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஹதீஸ் விளக்கம் : அல்லாஹ்வை விசுவாசித்து, அவனது வாக்குறுதியை உண்மைப்படுத்தி, நன்மையை எதிர்பார்த்து, முகஸ்துதி இன்றி அவனுக்காக ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ரமழானின் சிறப்பும், அதற்குரிய உயர்ந்த இடமும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது நோன்பிற்குரிய மாதமாகும், அதில் நோன்பு நோற்றவரின் (சிறு)பாவங்கள், தவறுகள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படுகின்றன.
  2. ரமழான் மாதம் எனக் கூறாமல் ரமழான் என மாத்திரமும் இம்மாதத்திற்குப் பிரயோகிக்கலாம்.