عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، وَصُفِّدَتِ الشَّيَاطِينُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1079]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
'ரமழான் வந்துவிட்டால், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். நரகத்தின் வாயில்கள் மூடப் பட்டுவிடும். ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு விடுவர்.'
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 1079]
இங்கு நபியவர்கள், ரமழான் மாதம் வந்துவிட்டால் மூன்று விடயங்கள் நிகழுவதாக அறிவிக்கின்றார்கள்: முதலாவது : சுவனத்தின் வாயில்கள் திறக்கப் படுகின்றன. எனவே அதன் எந்த வாயிலும் மூடப்பட மாட்டாது. இரண்டாவது : நரக வாயில்கள் மூடப்படும். எனவே, அதன் எந்த வாயிலும் திறக்கப்படமாட்டாது. மூன்றாவது : ஷைத்தான்களும், கட்டுக்கடங்காத ஜின்களும் சங்கிலியால் கட்டப்படுவார்கள். எனவே, ரமழான் அல்லாத காலங்களில் நெருங்க முடியுமான விடயங்களுக்கு அவர்களால் ரமழானில் நெருங்க முடிவதில்லை. இவை அனைத்தும் இந்த மாதத்தை மகத்துவப்படுத்துவதாகும். மேலும், அமல்களில் ஈடுபடுபவர்கள் தொழுகை, தர்மம், திக்ர், குர்ஆன் ஓதல் போன்ற வணக்கங்களை அதிகபடுத்தவும், பாவங்களைத் தவிர்க்கவும் இது ஊக்குவிக்கின்றது.