عن أنس رضي الله عنه : أن النبي صلى الله عليه وسلم ومعاذ رديفه على الرَّحْلِ، قال: «يا معاذ» قال: لبَّيْكَ يا رسول الله وسَعْدَيْكَ، قال: «يا معاذ» قال: لَبَّيْكَ يا رسول الله وسَعْدَيْكَ، قال: «يا معاذ» قال: لبَّيْكَ يا رسول اللهِ وسَعْدَيْكَ، ثلاثا، قال: «ما من عبد يشهد أن لا إله إلا الله، وأَنَّ محمدا عبده ورسوله صِدْقًا من قلبه إلَّا حرمه الله على النار» قال: يا رسول الله، أفلا أُخْبِر بها الناس فَيَسْتَبْشِرُوا؟ قال: «إِذًا يتكلوا» فأخبر بها معاذ عند موته تَأَثُّمًا.
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : 'ஒரே வாகனத்தின் மீது முஆத் (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபி (ஸல்) அவர்கள் 'முஆதே!'' என்று அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என்று முஆத் (ரலி) கூறினார். 'முஆதே!' என்று என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என மீண்டும் முஆத் (ரலி) கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறப்பட்டது. பிறகு 'தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!' என்று முஆத் கேட்டதற்கு 'அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள்' என நபியவர்கள் கூறினார்கள்.இருப்பினும் மார்க்க அறிவை மறைத்த குற்றத்திற்கு ஆளாகாமலிருப்பதற்காக முஆத் (ரலி) அவர்கள் தமது இறுதிக் காலத்தில் இதனை அறிவித்தார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஒரே வாகனத்தின் மீது முஆத் (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'முஆதே!'' என்று அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என்று முஆத் (ரலி) கூறினார். இவ்வாறு மூன்று முறை அழைக்க மூன்று முறையும் முஆத் (ரலி) அவர்கள் அதே பதிலையே கூறினார்கள். பின்னர் கூறினார்கள் : வெறும் நாவினால் மாத்திரமின்றி உள்ளத்தினாலும் உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார் என்பதை சாட்சியம் கூறினால் நரகில் நிரந்தரமாக இருப்பதை அல்லாஹ் அவருக்கு ஹராமாக்கி விட்டான். மக்களை மகிழ்விப்பதற்காக இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? என்று முஆத் (ரலி) கேட்டதற்கு 'வேண்டாம், அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள், அமல் செய்வதை விட்டு விடுவார்கள்' என நபியவர்கள் கூறினார்கள். இருப்பினும் மார்க்க அறிவை மறைத்த குற்றத்திற்கு ஆளாகாமலிருப்பதற்காக முஆத் (ரலி) அவர்கள் தமது இறுதிக் காலத்தில் இதனை அறிவித்தார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. விபரீதம் ஏற்படும் என்றோ, சிறந்த ஒன்றை விட்டுவிடும் நிலை ஏற்படும் என்றோ இருந்தால் சில செய்திகளைச் சொல்லாமல் இருந்து விடலாம்.
  2. நோவினை ஏற்படுத்தக் கூடாது என்ற நிபந்தனைக்கமைய பிராணிகளில் இருவர் அமர்ந்து சவாரி செய்யலாம்.
  3. நபி (ஸல்) அவர்களிடம் முஆத் (ரலி) அவர்களுக்கு இருந்த இடமும், அன்னார் இவர்களை நேசித்த விதமும் தெளிவாகின்றது.
  4. கேள்வி கேட்பவரின் உள்ளத்தில் ஏற்படும் ஐயங்கள் பற்றி விளக்கம் கேட்கலாம்.
  5. உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார் என்ற சாட்சியத்தின் நிபந்தனைகளுள் சந்தேகத்துடனோ, நயவஞ்சகத்துடனோ கூறாமல் உண்மையாளராகக் கூற வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
  6. ஓரிறைக் கொள்கையுடன் மரணித்தவர்கள் நரகில் நிரந்தரமாக்கப்பட மாட்டார்கள். தாம் செய்த சில பாவங்களுக்காக அங்கு சென்றாலும் தூய்மையடைந்து மீண்டும் வெளியேறி விடுவார்கள்.
மேலதிக விபரங்களுக்கு