عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ، مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ» قَالَ أَبُو هُرَيْرَةَ: اقْرَؤُوا إِنْ شِئْتُمْ: {فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ} [السجدة: 17].

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 4779]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ் கூறுகின்றான் : என்னுடைய நல்லடியார்களுக்கு, எந்தக் கண்களும் கண்டிராத, எந்தக் காதுகளும் கேட்டிராத, எந்த மனித உள்ளத்திலும் தோன்றிராத விடயங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளேன். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் விரும்பினால், "அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) 'எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது". (அஸ்ஸஜ்தா : 17) என்ற வசனத்தை ஓதிப் பாருங்கள்.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 4779]

விளக்கம்

இங்கு நபியவர்கள், உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் கூறுவதாகப் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள் : என்னுடைய நல்லடியார்களைக் கண்ணியப் படுத்தும் விதமாக, சுவனத்தில் எந்தக் கண்களும் காணாத, வர்ணனையால் எந்தக் காதும் கேட்டிராத, யதார்த்த்தால் எந்த உள்ளத்திலும் தோன்றிராத பலவற்றை நான் ஏற்பாடு செய்துவைத்துள்ளேன். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் விரும்பினால்,
"அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) 'எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது". என்ற வசனத்தை ஓதிப் பாருங்கள். (அஸ்ஸஜ்தா : 17)

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இந்த ஹதீஸ் அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியாகும். இவ்வாறான ஹதீஸ்கள் 'ஹதீஸ் குத்ஸீ (புனிதமிக்க நபிமொழி), 'ஹதீஸ் இலாஹீ' (தெய்வீக நபிமொழி) எனும் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவ்வாறான ஹதீஸ்களின் வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும். என்றாலும் அல்குர்னுக்குரிய தனித்துவங்கள் இதற்குக் கிடையாது. அதாவது அல்குர்ஆன் பெற்றுள்ள தனித்துவங்களான ஓதுவது வணக்கம், ஓதுவதற்கு வுழு செய்து கொள்ளுதல் (விரும்பத்தக்கது), சவால் விடுதல், அற்புதம் போன்றவை இவ்வகையான ஹதீஸ்களுக்கு கிடையாது.
  2. அல்லாஹ் தனது நல்லடியார்களுக்கு ஏற்பாடு செய்து வைத்துள்ளவற்றை அடைந்து கொள்வதற்காக, நல் அமல்களில் ஈடுபடவும், பாவங்களை விடவும் ஊக்குவித்தல்.
  3. அல்லாஹ் தஆலா தனது வேதத்திலும், தனது நபியின் ஹதீஸ்களிலும் சுவனத்தில் உள்ள அனைத்தையுமே எமக்குத் தெரியப்படுத்தவில்லை. நாம் அறிந்துள்ளவற்றை விட, அறியாதவை மகத்தானவை.
  4. சுவன இன்பங்களின் பரிபூரணத் தன்மையையும், சுவனவாதிகள் கலங்கமோ, அச்சமோ அற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள் என்பதையும் தெளிவுபடுத்தல்.
  5. உலக இன்பங்கள் நீங்கிச் செல்லக் கூடியவை. மறுமையே சிறந்தது. மேலும் நிலையானது.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية الرومانية المجرية الموري Малагашӣ الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு