عن جندب بن عبد الله رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «مَنْ صَلَّى صلاةَ الصُّبْحِ فهو في ذِمَّةِ اللهِ فلا يَطْلُبَنَّكُمُ اللهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ، فَإِنَّهُ مَنْ يَطْلُبْهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ يُدْرِكْهُ، ثُمَّ يَكُبُّهُ على وَجْهِهِ في نَارِ جَهَنَّمَ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல் கஸ்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :
'ஸுப்ஹ் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரணை செய்யும் நிலையை நீங்கள் ஏற்படுத்திட வேண்டாம். ஏனெனில், அவன் தன் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து ஒருவரிடம் விசாரிக்கத் தொடங்கினால், அதைக் கண்டுபிடித்தே தீருவான். பின்னர் (வரம்பு மீறி நடந்துகொண்ட) அவனை நரக நெருப்பில் அல்லாஹ் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 657]
யார் ஸுப்ஹ் தொழுகையை தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் பிரத்தியேகமான பாதுகாப்பும், புகழிடமும் உண்டு, எனவே அவனை பாதுகாத்து அவனுக்கு உதவிபுரிகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறான பாதுகாப்பை,பொறுப்பை பஜ்ர் தொழுகையை விட்டுவிடுவதன் மூலமோ, அல்லது தொழுகின்றவருக்கு இடையூறு செய்து அடர்ந்தேருவதன் மூலமோ இதனை முறித்து விடவேண்டாம் என நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இவ்வாறு செய்பவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை முறித்து விட்டவராவர். யார் இவ்வாறு செய்வதற்கு எத்தனிக்கிறாரோ அவர் இந்த விடயத்தை தட்டிக் கழித்தவராவார். அவரை அல்லாஹ் நரகில் முகம்குப்புற வீசிவிடுவான்.