عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ أَوْ رَاحَ أَعَدَّ اللهُ لَهُ فِي الْجَنَّةِ نُزُلًا، كُلَّمَا غَدَا أَوْ رَاحَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 669]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
யார் பள்ளிவாசலுக்கு காலையிலோ, மாலையிலோ செல்கின்றாரோ, அவ்வாறு காலையிலோ, மாலையிலோ செல்லும் போதெல்லாம் சுவனத்தில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வான்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 669]
வணக்கத்திற்காக வேண்டியோ, கல்விக்காகவோ, வேறு எந்த நல்ல நோக்கங்களுக்காக வேண்டியோ, காலை, மாலை என எந்த நேரத்திலாவது யாராவது பள்ளிவாசலுக்குச் சென்றால், அவ்வாறு காலையிலும், மாலையிலும் பள்ளிவாசலுக்குச் செல்லும் போதெல்லாம், சுவனத்தில் அவருக்கு அல்லாஹ் ஒரு விருந்தையும், அதற்குரிய ஓர் இடத்தையும் ஏற்பாடு செய்வான் என நபியவர்கள் நற்செய்தி கூறுகின்றார்கள்.