عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلًا، فَلْيَعْتَزِلْنَا -أَوْ قَالَ: فَلْيَعْتَزِلْ- مَسْجِدَنَا، وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ»، وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِقِدْرٍ فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ، فَوَجَدَ لَهَا رِيحًا، فَسَأَلَ فَأُخْبِرَ بِمَا فِيهَا مِنَ البُقُولِ، فَقَالَ قَرِّبُوهَا إِلَى بَعْضِ أَصْحَابِهِ كَانَ مَعَهُ، فَلَمَّا رَآهُ كَرِهَ أَكْلَهَا، قَالَ: «كُلْ فَإِنِّي أُنَاجِي مَنْ لاَ تُنَاجِي».
ولِمُسْلِمٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ، الثُّومِ - وقَالَ مَرَّةً: مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 855]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
யார் வெள்ளைப் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுகின்றாரோ, அவர் எங்களை விட்டும் - அல்லது எமது பள்ளிவாசலை விட்டும் - ஒதுங்கி, தனது வீட்டில் இருந்துகொள்ளட்டும். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத் தம்முடனிருந்த ஒரு தோழருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிடவில்லை)” என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 855]
வெள்ளைப் பூண்டு அல்லது வெங்காயம் போன்றவற்றைச் சாப்பிட்டவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதை நபியவர்கள் தடுக்கின்றார்கள். ஏனெனில், அவர்கள் தமது துர்வாடையினால், ஜமாஅத் தொழுகைக்கு வரும் சகோதரர்களுக்குத் தொல்லையை ஏற்படுத்துகின்றார்கள். இது (தடையைக் காட்டாத) தூய்மைப்படுத்தல் சார்ந்த அமைப்பில், பள்ளிவாசலுக்கு வருவதைத் தான் தடுக்கின்றதே ஒழிய, அவற்றைச் சாப்பிடுவதை அல்ல. ஏனெனில். அவை அனுமதிக்கப்பட்ட உணவுகளாகும். காய்கறிகள் உள்ள ஒரு சட்டி நபியவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அதில் ஒரு துர்வாடையை நபியவர்கள் உணர்ந்த போது, அதில் இருப்பவை பற்றி நபியவர்களுக்குக் கூறப்பட்டது. உடனே நபியவர்கள் சாப்பிடாமல் தவிர்ந்து கொண்டார்கள். பின்பு நபியவர்கள் தனது ஒரு நபித்தோழர் அதனைச் சாப்பிடுவதற்காக, அவரிடம் கொடுத்தார்கள். அவரும் நபியவர்களைப் பின்பற்றி, அதைச் சாப்பிட வெறுத்தார். அதை நபியவர்கள் கண்டவுடன், 'நீங்கள் சாப்பிடுங்கள். நான் மலக்குகளுடன் உரையாடுகின்றேன்.' என்று கூறினார்கள்.
துர்வாடைகளால் மனிதர்கள் தொந்தரவுக்குள்ளாவது போன்று, மலக்குகளும் உள்ளாவதாக நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள்.