عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال:
«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 47]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :
'அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்புகிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்;. அல்லாஹ்வையும் இறுதிநாளையும் யார் நம்புகிறாரோ அவர் தனது அயல் வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்புகிறாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 47]
அல்லாஹ்வையும், மரணத்தின் பின் மனிதன்; மீண்டு சென்று அவனின் செயலுக்குரிய கூலியை பெற்றுக்கொள்ளும் இடமாகிய மறுமை நாளையும் நம்பிய ஒரு முஃமினான அடியானுக்கு அவனின் ஆழமான ஈமான் பின்வரும் நற்பழக்கங்களை, நல்ல விடயங்களை செய்யத் தூண்டும் என்பதை நபியவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். அந்த நற்செயல்கள் பின்வருமாறு:
முதலாவது : நல்ல வார்த்தை பேசுதல்: இதில் தஸ்பீஹ் (ஸுப்ஹானல்லாஹ் கூறுதல்) தஹ்லீல் (லாஇலாஹ இல்லல்லாஹ் கூறுதல்) நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், மனிதர்களுக்கு மத்தியில் பிணக்குளைத் தீர்த்து சமாதானம் செய்து வைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடங்குகிறன. இவ்வாறு நல்ல வார்த்தை அல்லது பயனுள்ள விடயங்களை பேச முடியவில்லையெனில் மௌனமாக இருப்பதோடு பேசுவதினால் மற்றவருக்கு தொந்தரவு இழைப்பதை விட்டு தன் நாவை பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்.
இரண்டாவது : அயலவருக்கு உபத்திரம் செய்யாது, உபகாரம் செய்து அவர்களை கண்ணியப் படுத்துதல்.
மூன்றாவது : உம்மை தேடி சந்திப்பதற்காக வரும் விருந்தாளியை நல்ல வார்த்தை பேசி, உணவளித்து உபசரித்து இது போன்ற நல்ல விடயங்களை செய்து அவரை கௌரவப் படுத்துதல்