عن عبد الله بن عمرو بن العاص - رضي الله عنهما- قال رسول الله صلى الله عليه وسلم : «إن المُقْسِطين عند الله على منابر من نور: الذين يعدلون في حكمهم وأهليهم وما ولَوُاْ».
[صحيح] - [رواه مسلم. ملحوظة: في صحيح مسلم زيادة على ما في رياض الصالحين: قال رسول الله صلى الله عليه وسلم: «إن المقسطين عند الله على منابر من نور، عن يمين الرحمن -عز وجل-، وكلتا يديه يمين»]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறுகின்றார்கள் : "c2">“நிச்சயமாக தன் குடும்பத்திலும் ஆட்சியிலும் அவர்கள் அதிகாரம் பெற்றவைகளிலும் நீதமாக நடக்கக் கூடியவர்கள் அல்லாஹ்விடமுள்ள ஒளியிலான மேடைகளில் இருப்பார்கள்”.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

தமது ஆட்சி, அதிகாரத்திற்குக் கீழிருக்கும் மக்கள் மத்தியில் நீதமாகவும், சத்தியத்தை வைத்தும் தீர்ப்புச் செய்வோருக்கு இந்நபிமொழியில் ஒரு நற்செய்தி உள்ளது. அவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் ஒளியினாலான மேடைகளில் வீற்றிருப்பார்கள். இந்த மேடைகள் அல்லாஹ்வின் வலக்கரத்திற்கு அருகில் உள்ளன. அல்லாஹ்வுக்கு வலக்கரம் இருப்பதை மறுக்காமல், விதம் கூறாமல், உவமைப்படுத்தாமல், திரிபு படுத்தாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்நபிமொழியில் ஆதாரமுள்ளது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நீதம் செலுத்துவதன் சிறப்பும், அதற்கான ஊக்குவிப்பும் இந்நபிமொழியில் உள்ளது.
  2. மறுமையில் நீதம் செலுத்துவோரின் தரம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
  3. மறுமையில் தத்தமது நற்செயல்களுக்கு ஏற்ப விசுவாசிகளின் தரங்களில் ஏற்றத் தாழ்வுண்டு.
  4. அழைப்புப் பணியில் ஆர்வமூட்டல் முறையைக் கையாள்வது அழைக்கப்படுபவரை வழிப்படத்தூண்டும்.
  5. அல்லாஹ்வுக்கு வலக்கரம் இருப்பதை மறுக்காமல், விதம் கூறாமல், உவமைப்படுத்தாமல், திரிபு படுத்தாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்நபிமொழியில் ஆதாரமுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு