عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
«رَحِمَ اللهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ، وَإِذَا اشْتَرَى، وَإِذَا اقْتَضَى».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 2076]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'விற்றாலும், வாங்கினாலும், கடனைத் திருப்பக் கேட்டாலும் மென்மையாக நடந்து கொள்ளும் ஓர் அடியானுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 2076]
தனது வியாபாரத்தில் தாராளத்தன்மையுடன், வல்லல் தன்மையுடனும், மென்மையாகவும் நடந்து கொள்ளும் அனைவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். வாங்குபருக்கு அவர் வாங்கும் பொருளின் விலையில் சிரமப்படுத்தாது நல்ல பண்பாட்டுடன் நடந்து கொள்வார். பொருளை கொள்வனவு செய்தாலும் மென்மையாகவும் தாராளத்தன்மையுடனும், நடந்து கொள்வார். அவர் பொருளின் விலையை அளவுக்கதிகமாகக் குறைத்தோ அதன் பெறுமதியை குறைத்தோ வாங்கமாட்டார் கடனை நிறைவேற்றுமாறு கோரினாலும் அவருடன் மென்மையாகவும், தாராளத் தன்மையுடனும் நடந்து கொள்வார். கடனைப் பெற்றவர் பரம ஏழையாக, தேவையுடையவராக இருப்பின் அவர்களுடன் மென்மையாகவும் இங்கிதமாகவும் அவர்களிடம் கேட்பதோடு, அதனை நிறைவேற்ற வசதியற்றவர்களுக்கு கால அவகாசம் அளிப்பார்.