+ -

عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: « رَغِمَ أنْفُ، ثم رَغِمَ أنْفُ، ثم رَغِمَ أنْفُ من أدرك أبويه عند الكِبر، أحدهما أو كِليهما فلم يدخل الجنة».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

"எவன் தன் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவருமோ வயோதிபம் அடைந்திருக்கும் நிலையில் அவர்களை அவன் அடையப் பெற்றும் சுவர்க்கம் செல்ல வில்லையோ அவன் அழிந்து போகட்டும்.அவன் அழிந்து போகட்டும் அவன் அழிந்து போகட்டும் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:பெற்றோரின் உரிமை மகத்தானது.எனவேதான் என்ன நோக்கத்திற்காக மனுவையும்,ஜின்னையும் அல்லாஹ் படைத்தானோ அது பற்றி அவன் குறிப்பிடும் போது "அல்லாஹ்வை வணங்குங்கள் எது வொன்றையும் அவனுக்கு இணையாக ஆக்காதீர்கள்" என்ற வாசகத்துடன்"இன்னும் பெற்றோருக்கு உதவி செய்யுங்கள்" என்பதையும் இணைத்துக் கூறியிருக்கின்றான் இதன் மூலம் தன்னை வணங்கும்படி கட்டளையிட்ட அல்லாஹ் பெற்றோருக்கு சொல்லாலும்,செயலாலும் உதவி,உபகாரம் செயும்படியாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளான்.இதுவெல்லாம் அவர்கள் தங்களின் நிம்மதியை விடவும் தங்களின் பிள்ளைகளின் நலனில் கவணம் செலுத்தி அவர்களை வளர்த்து பரிபாலித்து வந்ததமையாலும்,அவர்களுக்காக இரவு விழித்து வந்தமையைாலும்தான்.ஏனெனில் உபகாரத்திற்குக் கூலி பிரதி உபகாரமல்லாது வேறு ஏதுமுண்டோ?மேலும் எவன் தங்களின் பெற்றோர் இருவரையுமோ அல்லது ஒருவரையுமோ அடையப் பெற்றும் சுவர்க்கம் செல்லவில்லையோ அவனை அல்லாஹ்வின் தூதர் மூன்று தடவைகள் சபித்தார்கள் என்றால் அவன் தன் பெற்றோருக்கு உதவி உபகாரம் செய்யவுமில்லை அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவுமில்லை என்பதற்காகத்தான்.எனவே பெற்றோருக்கு உதவி உபகாரம் செய்வதும்,அவர்களுக்கு அடிபணிந்து நடப்பதுவும் நரக பிரவேசத்திலிருந்து மனிதனைப் பாதுகாக்கும் காரணியாகும் என்பதும். அல்லாஹ்வின் கருணை கிடைக்காது போனால் பெற்றோருக்கு மாறு செய்வதும்,அவர்களின் மீது அன்பு செலுத்தாமல் இருப்பதுவும் நரக பிரவேசத்திற்குக்கான காரணியாகும்.என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية Малагашӣ Урумӣ Канада
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு