عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيرُ فِي طَرِيقِ مَكَّةَ، فَمَرَّ عَلَى جَبَلٍ يُقَالُ لَهُ جُمْدَانُ، فَقَالَ: «سِيرُوا هَذَا جُمْدَانُ، سَبَقَ الْمُفَرِّدُونَ» قَالُوا: وَمَا الْمُفَرِّدُونَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الذَّاكِرُونَ اللهَ كَثِيرًا وَالذَّاكِرَاتُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2676]
المزيــد ...
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்ட போது 'ஜும்தான்' எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'செல்லுங்கள்: இது 'ஜும்தான்' மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் (முபர்ரித்தூண்கள்) வெற்றி பெற்றுவிட்டார்கள்;' என்று சொன்னார்கள். மக்கள், 'தனித்து விட்டவர்கள் (முபர்ரித்தூண்கள்) என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்' என்று பதிலளித்தார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2676]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவோரின் அந்தஸ்த்துக்களை தெளிவு படுத்துகிறார்கள் அவர்கள் தனித்துவமானவர்கள் ஏனையோரை விட இன்பம் நிறைந்த சுவர்க்கத்தில் உயர் அந்தஸ்துக்களை அடைந்து கொண்டவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். இவர்களின் நிலை ஏனைய மலைகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக திகழும் 'ஜும்தான்' என்ற மலைக்கு ஒப்பானது என்று விவரிக்கிறார்கள்.