+ -

عن أبي كريمة المقداد بن معد يكرب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ، فَلْيُخْبِرْهُ أَنَّهُ يُحِبُّهُ».
[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي في السنن الكبرى وأحمد]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ கரீமா மிக்தாத் பின் மஃதீ கரிப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "தனது சகோதரனை ஒருவர் நேசித்தால் அவரிடம் தான் நேசிப்பதை அறிவிக்கட்டும்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

விளக்கம்

அல்லாஹ்விற்காக நேசம் கொள்வது, அதற்கான கூலிகள் பற்றி பல நபிமொழிகள் அறிவித்து, அழைப்பும் விடுத்துள்ளது. இந்நபிமொழி இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் நேசம் பரவச் செய்வதுடன் அவர்களது தொடர்பில் பாரிய ஒரு தாக்கத்தை செலுத்தும் ஒரு முக்கிய காரணத்தை சுட்டிக் காட்டுகின்றது. அதுதான் தனது நேசத்தை குறித்த நபரிடம் வெளிப்படையாகவே கூறிவிடுவதாகும். இது சிதைவு மற்றும் வீழ்ச்சிக்கான காரணிகளிலிருந்து சமூக கட்டமைப்பைப் பாதுகாப்பதில் பயனளிக்கிறது. இஸ்லாமிய சமூகத்தின் உறுப்பினர்களிடையே அன்பைப் பரப்புவதன் மூலமும், இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவதன் மூலமுமே இது நடக்கிறது. அல்லாஹ்வுக்காக நேசிப்போர் தமது நேசத்தை பரஸ்பரம் வெளிப்படுத்துவது போன்ற காரணிகளை மேற்கொள்வதன் மூலமே இவையனைத்தும் சாத்தியப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوزبكية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தனது சகோதரனை அல்லாஹ்வுக்காக நேசிப்பவர் அவரிடம் அதனைச் சொல்லி விடட்டும்.
  2. இந்த அறிவிப்பின் பயன் என்னவெனில், குறித்த நபர் தன்னை நேசிப்பதாக அறிந்தால் இவர் காட்டிய நேர்வழியில் இவரது உபதேசத்தை ஏற்றுக் கொள்வார், இரகசியமாக இவர் அழைத்த நல்ல விடயங்களைத் தட்டமாட்டார்.
  3. அன்பும் நேசமும் மேலும் வலுக்க அல்லாஹ்வுக்காக நேசிக்கப்பட்டவரும் தனது நேசத்தை வெளிப்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
மேலதிக விபரங்களுக்கு