ஹதீஸ் அட்டவணை

'தனது சகோதரனை (அல்லாஹ்வுக்காக)ஒருவர் நேசித்தால் அவரிடம் தான் அவனை நேசிப்பதை அறிவிக்கட்டும்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எங்களிடம்), 'புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், 'இது குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று பதிலளித்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அபூ ஹுரைரா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள். "ஒரு அடியான் (நல்லதா?கெட்டதா? என) சிந்திக்காமல் பேசுகிறான், அதன் மூலம் அவன் கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே உள்ள மிக தூரமான அளவுக்கு நரகில் வீழ்வான்" என நபி (ஸல்) கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஒருவர் சத்தியம் செய்யும் போது தன் சத்தியத்தில் 'லாத், உஸ்ஸாவின் மீது சத்தியமாக' என்று கூறினால் அவர் 'லாஇலாஹ இல்லல்லாஹ் ' என்று கூறட்டும். ஒருவர் தன் தோழரிடம் வா உன்னுடன் சூதாட்டம் விளையாடுகிறேன் என்று கூறினால் அவர் (இப்படிக் கூறியதற்காக) தானதர்மம் செய்யட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று ஒருவரிடம் காணப்படுமாயின் அவர் அதனை விட்டும் வரையில் அவரிடம் நயவஞ்சகத்தின் பண்புகளில் ஒன்று உள்ளது. அப்பண்புகளாவன. பேசினால் பொய்யுரைப்பான். ஒப்பந்தம் செய்தால் அதில் மோசடி செய்வான். வாக்களித்தால் மாறுசெய்வான். வழக்காடினால் -விவாதம் செய்தால்- நேர்மை தவறி நடந்து கொள்வான்”
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உனக்கு என்ன நேர்ந்து விட்டது? நீ உனது தோழனின் கழுத்தை அறுத்துவிட்டாய்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது