عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ: وَاللَّاتِ وَالعُزَّى، فَلْيَقُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَمَنْ قَالَ لِصَاحِبِهِ: تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 4860]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
""யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின்மீது சத்தியமாக!' என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படும் வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், ''வா சூது விளையாடுவோம்' என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்'.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 4860]
அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கிறார்கள்.; ஏனெனில் ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வைத் தவிர வேறு யாரின் மீதும் சத்தியம் செய்ய அனுமதிக்கப் படமாட்டார். அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவர்கள் - உதாரணமாக, அறியாமை காலத்தில் வணங்கப்பட்ட லாத் அல்லது உஸ்ஸாவின் சிலைகளின் மீது சத்தியம் செய்பவர்கள் - தங்கள் தவறை சரிசெய்து, 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூற வேண்டும். தவ்ஹீத் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை) என்ற வாசகத்தைச் சொல்வது கட்டாயமாகும். அந்தக் கூற்று, இணைவைப்பிலிருந்து ஒருவர் விலகி இருப்பதைப் பற்றிய அறிவிப்பாகவும், ஒருவரின் பொய்யான சத்தியத்திற்கான பரிகாரமாகவும் உள்ளது.
ஒரு நபர் தனது நண்பரை சூதாட்டம் விளையாட அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். சூதாட்டம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தங்களுக்குள் பணத்தை வைத்து போட்டியிடுவதாகும்;. அதில் வெற்றியாளர் அனைத்துப் பணத்தையும் எடுத்துக் கொண்டு, பங்கேற்பாளர்களில் ஒருவர் லாபமடைவார், மற்றவர் நஷ்டமடைவார். இவ்வாறு சூதாட்டத்திற்கு அழைத்தவர் அவர் தனது தவறுக்கு குற்றப்பரிகாரமாக ஏதாவது ஒன்றை தர்மம் செய்வது விரும்பத்தக்கது.