عَنْ عَائِشَةَ أُمِّ المُؤمنينَ رضي الله عنها قَالَتْ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ التَّيَمُّنُ، فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 168]
المزيــد ...
உம்முல் முஃமினீன ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 168]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கௌரவமான அனைத்து நல்ல விடயங்களிலும்; வலதைக் கொண்டு ஆரம்பிப்பதை மிகவும் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறான விடயங்கள் வருமாறு : தனது பாதணியை காலில் அணியும் போதும், தனது தலை முடி மற்றும் தாடியை வாரும் போதும் அவை இரண்டிற்கும் எண்ணைத் தேய்த்து உலர்த்தும் போதும், வுழுச்செய்யும் போது கைகளையும் கால்களையும் கழுவுவதிலும் வலது பக்கத்தால் தொடங்குவார்கள்.