عَنْ المُغِيرَةِ رضي الله عنه قَالَ:
كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ، فَقَالَ: «دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ» فَمَسَحَ عَلَيْهِمَا.

[صحيح] - [متفق عليه]
المزيــد ...

முகீரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நான் ஒரு பயணத்தின்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (வுழுச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதைவிட்டுவிடுவீராக. கால்கள் இரண்டும் வுழுவுடன் இருக்கும் நிலையில்லதான் காலுறைகளை அணிந்தேன்' என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்'

ஸஹீஹானது-சரியானது - புஹாரியும், முஸ்லிமும் ஒன்றுபட்டது.இதன் வாசகம் புஹாரீ அவர்களுக்குரியது

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்தார்கள் அப்போது அவர்கள் வுழு செய்தார்கள் இரு கால்களையும் கழுவும் நிலையை அடைந்ததும் முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களின் கால்களில் இருந்த பாதணிகளை கழுவி விடுவதற்காக கையை நீட்டினார்கள். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அதனை –காலுறைகளை-பாதணிகளை- -கழட்டாது விட்டுவிடுங்கள் ஏனெனில் நான் அதனை வுழுவோடு இருக்கும் நிலையிலேயே அணிந்தேன் என்று கூறினார்கள். இரு கால்களையும் கழுவுவதற்குப்பதிலாக தனது இரு காலுறைகளின்-(பாதணிகளின்) - மீதும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மஸ்ஹ் செய்தார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو الأسامية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. வுழுவுடன் காலுறை அணிந்திருந்து சிறு தொடக்கு ஏற்பட்டால், அவர் வுழு செய்யும் போது அதன் மீது மஸ்ஹ் செய்வது ஷரீஆவில் அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும்.ஆனால் பெருந்தொடக்கு ஏற்பட்டால் அவர் இரு கால்களையும் கழுவுவது அவசியமாகும்.
  2. காலுறையின் மீது மஸ்ஹ் செய்வது என்பது ஈரக்கையால் காலுரையின் கீழ்பகுதியல்லாது மேல் பகுதியை தடவிடுவதாகும்.
  3. காலுறையின் மீது மஸ்ஹ்செய்வற்கு சில நிபந்தனைகள் உண்டு அவைகளாவன. குறிப்பிட்ட காலுறையை முழுமையான முறையில் வுழு செய்ததன் பின் அணிந்திருத்தல் வேண்டும். காலுறையானது சுத்தமாக இருப்பதோடு,வுழுவின் போது கட்டாயம் கால் பகுதியில் கழுவவேண்டிய இடத்தை மறைக்கக்கூடியதாகும் இருப்பது அவசியமாகும்.மஸ்ஹானது சிறு தொடக்குக்கிற்குரியது அன்றி ஜனாபத் மற்றும் அவசியம் குளிக்க வேண்டிய விடயங்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது. அத்துடன் மஸ்ஹுக்குரிய காலப்பகுதி வரையறுக்கப்பட்டதாகும். அந்தவகையில் ஊரில் இருப்பவருக்கு ஒரு நாளும் பிரயாணிக்கு மூன்று நாட்களுமாகும்.
  4. 'குப்';பின் அளவுகோளுக்கு அமைவாக இருக்கும் காலுறை போன்ற இரு கால்களையும் மறைக்கக் கூடியவை அனைத்தின் மீதும் மஸ்ஹ் செய்வது அனுமதிக்கப்படும்.
  5. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நற்குணமும் அவர்களின் அழகிய கற்றபித்தல் பண்பும் தெளிவாகிறது. அன்னார் முகீராவை இரு பாதணிகளையும் கழட்டுவதை விட்டு தடுத்தது இதனை தெளிவு படுத்துகிறது.அவர்கள் தான் வுழுவுடன் அணிந்துள்ளதாகக் கூறி அவரை சமாதானப்படுத்தி அதன் சட்டத்தையும் தெளிவு படுத்தியமை அவர்களின் அழகிய வழிமுறையை எடுத்துக்காட்டுகிறது.
மேலதிக விபரங்களுக்கு