عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيُّ قَالَ:
لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: أَخْبِرْنِي بِعَمَلٍ أَعْمَلُهُ يُدْخِلُنِي اللهُ بِهِ الْجَنَّةَ؟ أَوْ قَالَ قُلْتُ: بِأَحَبِّ الْأَعْمَالِ إِلَى اللهِ، فَسَكَتَ. ثُمَّ سَأَلْتُهُ فَسَكَتَ. ثُمَّ سَأَلْتُهُ الثَّالِثَةَ فَقَالَ: سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ، فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً، إِلَّا رَفَعَكَ اللهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً» قَالَ مَعْدَانُ: ثُمَّ لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَسَأَلْتُهُ فَقَالَ لِي: مِثْلَ مَا قَالَ لِي: ثَوْبَانُ.
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 488]
المزيــد ...
மஃதான் இப்னு அபீதல்ஹா அல்யஃமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து, என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை சொல்லித்தாருங்கள் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரழி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம்கேட்டபோது இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக ஸஜ்தா செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு ஸஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு அந்தஸ்தை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்கிறான் என்று கூறினார்கள். என்றார்கள். பின்னர் நான் அபுதர்தா (ரழி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் ரழி அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 488]
சுவர்க்கத்திற்குள் பிரவேசிக்க காரணமாக அமையும் செயல் குறித்து அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்கள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேள்வி கேட்டவரைப் பார்த்து (அதிகமான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம்) அதிகமாக ஸுஜுத் செய்வதை பேணி வருவீராக, அவ்வாறு நீ செய்யும் ஒரு ஸஜ்தா உனது ஒரு அந்தஸ்த்தை உயர்த்தும். உனது குற்றமொன்றை அல்லாஹ் அதன் மூலம் மன்னித்து விடுகிறான் என்று பதிலளித்தார்கள்.