عن كعب بن عياض رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «إن لكل أُمَّة فتنة، وفِتنة أُمَّتي: المال».
[صحيح] - [رواه الترمذي والنسائي في الكبرى وأحمد]
المزيــد ...
"எல்லா சமூகத்திற்கும் ஒரு சோதனையுண்டு.எனது சமூகத்தின் சோதனை செல்வம்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என கஃபு இப்னு இயாழ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]
"எல்லா சமூகத்திற்கும் ஒரு சோதனையுண்டு" அதாவது வழிகேட்டிலும்,பாவ காரியங்களிலும் வீழ்த்தக்கூடிய கருமங்கள் உண்டு, என்றும்,எனது சமூகத்தின் சோதனை செல்வம்.என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்வதை நான் செவிமடுத்தேன் என்று கஃபு இப்னு இயாழ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஏனெனில் அது உலகிலிருக்கும் வளங்களை அடைவதற்குக் காரணமாகவும்,மறுமையில் இருப்பவற்றைப் பூரணமாக அடைந்து கொள்வதற்குத் தடையாகவும் செல்வம் அமைகின்றது.எனவே செல்வத்தைக் கொண்டு வீன் விளையாட்டுக்களில் ஈடுபாடு கொள்ளும் போது அது நல்ல கருகங்களில் ஈடுபடுவதை விட்டும் சிந்தனையைத் திசை திருப்பி மறு உலகை மறக்கச் செய்துவிடும்.