عن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال:
«لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 780]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'உங்கள் வீடுகளைக் அடக்கஸ்தளங்களாக ஆக்கிவிடாதீர்கள், நிச்சயமாக ஷைதான் ஸூரா பகரா ஓதப்படும் வீட்டைவிட்டும் விரண்டோடுகின்றான்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 780]
தொழுகை நடைபெறாத அடக்கஸ்தளங்களைப் போன்று வீடுகளை ஆக்கி விட வேண்டாமென நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் தடுத்துள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து ஸுறா பகரா ஓதும் வீட்டிலிருந்து ஷைதான் விரண்டோடுகிறான் எனவும் தெரிவிக்கிறார்கள்.