عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«لَأَنْ أَقُولَ: سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلهِ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2695]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு
அக்பர்' (அல்லாஹ் தூயவன்; அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் உதயமாகும் இவ்வுலகைவிடவும் எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2695]
இந்த மகத்தான வார்த்தைகளினால் அல்லாஹ்வை நினைவுகூர்வது உலகம் அதில் உள்ளவற்றைவிடவும் சிறந்தது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள் அந்த வார்த்தைகள் பின்வருமாறு :
"ஸுப்ஹானல்லாஹ்" என்பது: (அல்லாஹ்வை தூய்மையானவன்) என்பது அனைத்துவகையான குறைகளைவிட்டும் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தலைக் இது குறிக்கிறது.
'அல்ஹம்து லில்லாஹ் என்பது : புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. போற்றி நேசம் கொள்வதற்குரிய நிறைவான பண்புகளின் மூலம் அல்லாஹ்வை பாராட்டி புகழ்தலைக் குறிக்கும்.
'லாஇலாஹ இல்லல்லாஹு' என்ற வார்த்தை உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை என்பதைக் குறிக்கும்.
"அல்லாஹு அக்பர்" என்பதன் கருத்து அவன் எல்லா அம்சங்களையும் விட போற்றவும் பெருமைப்படுத்தவும் மிகவும் தகுதியானவன்.