عن جابر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «أفضل الذِّكر: لا إله إلا الله».
[حسن] - [رواه الترمذي والنسائي في الكبرى وابن ماجه]
المزيــد ...

"திக்ரில் சிறந்தது لا إله إلا الله என்பதாகும்.என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஹஸனானது-சிறந்தது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்

விளக்கம்

திக்ருகளில் சிறந்தது, لا إله إلا الله என்ற வாசகம் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அறியத் தருகிறார்கள்.இன்னொரு ஹதீஸில் "நானும் எனக்கு முந்திய நபிமார்களும் கூறிய வாசகத்தில் சிறந்தது,"لا إله إلا الله وحده لا شريك له (இணை எதுமில்லாத அல்லாஹ் ஒருவனையன்றி வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் எதுவும் இல்லை)" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மகத்தான வாசகம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இதன் நிமித்தமே வானம்,பூமி நிலைத்திருக்கிறன.மேலும் இதன் நிமித்தமே எல்லா சிருஷ்டிகளும் படைக்கப்பட்டன. அல்லாஹ் தன் தூதர்கள் எல்லோருக்கும் இந்த வாசகத்தைக் கொடுத்தே அனுப்பினான்.இன்னும் அதற்காகவே வேதங்களையும் சட்டங்களையும் அருளினான்.மேலும் அதன் நிமித்தமே மறுமையில் அளவைகளும், பட்டோலைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் இதற்காகவே சுவர்க்கமும் நரகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த வாசகத்தின் கருத்து யாதெனில், அல்லாஹ்வையன்றி உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் ஒருவருமில்லை என்பதாகும். இதன் நிபந்தனைகள் ஏழு அவையாவன: அதன் பொருளை அறிதல், அதன் மீது உறுதி கொள்ளல், அதனை ஏற்றுக் கொள்ளல், அதற்குக் கட்டுப்படுதல், அதன் மீது விசுவாசமாகவும், உளத்தூய்மையுடனும், பற்றுடனும் இருத்தல் என்பவையாகும். மேலும் முன்னோரும், பின்னோரும் இது பற்றி விசாரிக்கப்படுவர். ஆகையால் அடியானின் பாதங்கள் இரண்டு வினாக்களுக்குப் பதிலளிக்காமல் அல்லாஹ்வின் எதிரிலிருந்து நகர முடியாது. அவவைதான் நீங்கள் எதை வணங்கினீர்கள்? இறைத்தூர்களுக்கு எப்படி பதிலளித்தீர்கள்? என்பவை இதில் முதலாவது வினாவின் பதில் " لا إله إلا الله " என்ற வாசகத்தின் பொருளை விளங்கி, அதனை ஏற்று அதன்படி செயல் பட்டேன், என்பதாகும். இரண்டாவது வினாவின் பதில்," أن محمدا رسول الله " என்ற வாசகத்தின் பொருளை விளங்கி, அதனை ஏற்று அதன்படி செயல் பட்டேன் என்பதாகும். மேலும் "இஸ்லாம் ஐந்து விடயங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது, அதில் ஒன்று உண்மையான வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி எதுவுமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்று சாட்சி பகருதல்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. வார்த்தைகளில் மிகச் சிறந்தது ஏகத்துவ வார்த்தையே. ஏனெனில் அது அல்லாஹ்வின் ஓரிறைக் கொள்கையை நிறுவி, இணையாளர்களை மறுக்கின்ற வார்த்தையாகும். மேலும் நபிமார்கள் கூறிய சிறந்த வார்த்தையும் இதுவே. இதன் நிமித்தமே அனுப்பப்பட்டார்கள், இந்தக் கொடியின் கீழிருந்தே போரிட்டார்கள், இதற்காகவே உயிர்த்தியாகம் செய்தார்கள். இதுவே நரகிலிருந்து தப்பித்து, சுவனம் நுழைவதற்கான திறவுகோளாகும்.
மேலதிக விபரங்களுக்கு