عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : "الْبَاقِيَاتُ الصَّالِحَاتُ، لَا إلَهَ إلَّا اللَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاَللَّهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ".
[صحيح بشواهده] - [رواه ابن حبان والحاكم، أما النسائي فرواه في الكبرى لكن من حديث أبي هريرة]
المزيــد ...

என்றும் நிலைத்திருக்கும் நல்லமல்கள்لَا إلَهَ إلَّا اللَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاَللَّهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ எனும் வாசகங்களாகும்.
அதன் ஆதாரங்களின் பிரகாரம் ஸஹீஹானது-சரியானது - இதனை இப்னு ஹிப்பான் அறிவித்தார்

விளக்கம்

கீர்த்தியும்,மேண்மையும் பொருந்திய அல்லாஹ்வைத் துதித்தல்,தூய்மைப்படுத்தல்,கண்ணியப்படுத்தல் எனும் கருத்துக்களை இந்த வாசகங்கள்அடக்கி உள்ள படியாலும்,அடியான் அல்லாஹ்வின் நாட்டமின்றி எதனையும் செய்யவும்,கெடுதிகளைத் தடுத்து நிறுத்தவும்,நல்லதை அனுகூலமாக்கிக் கொள்ளவும் சக்தியற்றவனாக இருக்கின்றபடியால் அல்லாஹ்வின் செயல்களின் நிமித்தம் அவனைப் போற்றிப் பாராட்டும் விடயம் இதில் பொதிந்துள்ளபடியாலும் இந்த திக்ரினை இதே வாசகங்களைக் கொண்டு ஓதி வருவதானது சிறப்புக்குரியது என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக விளங்குகின்றது.எனவே இந்த வாசகங்கள் இத்தகைய மகத்தான கருத்துக்களைக் கொண்டிருப்பதுதான் அதன் தாக்கமும்,பயனும் முஃமினான அடியான் மரணித்த பின்னரும் அவனுக்குத் தொடர்ந்தும் கிடைக்கக் காரணமாக அமைகிறது

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு