عن عبد الله بن عمر رضي الله عنهما قال:
سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فَقَالَ: «الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 36]
المزيــد ...
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு மனிதர் தனது சகோதரருக்கு வெட்கம் குறித்து உபதேசம் செய்து கொண்டிருப்பதை செவிமடுத்தார்கள், அப்போது நபியவர்கள் ' வெட்கம் ஈமானைச் சார்ந்தது என்று கூறினார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 36]
ஒரு மனிதர் தனது சகோதரனுக்கு அதிகம் வெட்கப்படுவதை விட்விடுமாறு உபதேசிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செவி மடுத்தார்கள், அதற்கு நபியவர்கள் வெட்கம் ஈமானைச் சார்ந்தது அது நன்மையை மாத்திரமே கொண்டுவரும் என அவருக்கு தெளிவுபடுத்தினார்கள்.
வெட்கம் ஒரு இயல்பண்பாகும், அது நல்லதைச் செய்யவும், அசிங்கமான அருவருக்கத்தக்க விடயங்களை தவிர்ந்து கொள்ளவும் மனிதனைத் தூண்டுகிறது.