عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الدُّعَاءُ لاَ يُرَدُّ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ».
[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي] - [سنن الترمذي: 212]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது.
[ஸஹீஹானது-சரியானது] - [رواه أبو داود والترمذي والنسائي] - [سنن الترمذي - 212]
இங்கு நபியவர்கள், அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆவின் சிறப்பைத் தெளிவுபடுத்தும் விதமாக, அது தட்டப்படமாட்டாது என்றும், அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும், எனவே, அந்நேரத்தில் துஆக் கேளுங்கள் என்பதாகவும் கூறுகின்றார்கள்.