عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
«أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 482]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் :
'ஓர் அடியான் ஸுஜூத் செய்து கொண்டிருக்கும் நிலையில்தான் தனது இரட்சகனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான், ஆகவே அந்நிலையில் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 482]
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு அடியான் அவன் ஸுஜூதில் இருக்கும் நிலையில் தனது இரட்சகனுக்கு மிகவும் நெருக்கமானவனாக உள்ளான் என்பதை தெளிவு படுத்துகிறார்கள். தொழும் ஒருவர் தனது மேனியின் மிகவும் உயர்ந்த மேன்மைமிக்க பகுதியான நெற்றியை அல்லாஹ்வுக்கு பணிந்து, அடக்கமாக தரையில் வைக்கும் இடம் அவன் ஸுஜூதில் இருக்கும் நிலையாகும்.
சொல்லினாலும் மற்றும் செயலினாலும் அல்லாஹ்வுக்கு பணிந்து அடக்கமாக இருக்கும் நிலை ஸுஜூதில் காணப்படுவதால் அந்நிலையில் இருக்கும் வேளை அதிகம் பிரார்தனை புரியுமாறு நபியவர்கள் கட்டளைப் பிரப்பித்துள்ளார்கள்.