عَنْ عَبْدِ اللَّهِ بنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1294]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
கன்னங்களில் அடித்துக்கொள்பவர்கள், ஆடைகளைக் கிழித்துக்கொள்பவர்கள், ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களைக் கூறுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 1294]
நபி (ஸல்) அவர்கள், சில ஜாஹிலிய்யாக் கால செயற்களை எச்சரித்துத் தடுக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள் :
முதலாவது : கன்னத்தில் அறைந்துகொள்பவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. கன்னத்தைக் குறித்துச் சொல்வதற்கான காரணம், பெரும்பாலும் அவ்வாறு நடப்பதால் தான். எனவே, முகத்தின் ஏனைய பகுதிகளும் இந்தத் தடையினுள் நுழையும்.
இரண்டாவது : ஆடையின் திறக்கப்படும் பகுதியைக் கிழித்து, பொறுமையின்மையின் உச்சகட்டமாகத் தமது தலையை அதில் நுழைத்துக் கொள்பவர்கள்.
மூன்றாவது : ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களாகிய, கேடு உண்டாகட்டும், அழிவு உண்டாகட்டும் என்று பிரார்த்தித்தல், ஒப்பாரி வைத்தல், புலம்புதல் போன்றவற்றைச் செய்தல்.