عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «أكْثَرُ مَا يُدْخِلُ الْجَنَّةَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ».
[حسن صحيح] - [رواه الترمذي]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "சுவனத்தில் அதிகம் நுழைவிப்பது அல்லாஹ்வின்மீதான அச்சமும், நல்ல பண்புகளுமாகும்".
சிறந்தது சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ்வின் மீதான அச்சமும் நற்பண்புகளும் சிறப்புக்குறியவை என்பதற்கும், அவை சுவர்க்கத்தை அடையச் செய்யும் காரணிகள் என்பதற்கும் இந்த ஹதீஸ் ஆதாரமாக விளங்குகிறது. எனவே அல்லாஹ்வின் மீதான பயமும்,நற்பண்புகளுமாகிய மகத்தான இவ்விரு கருமங்களும்தான் அடியானை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யும் பாரிய மற்றும் அதிகப்படியான காரணிகளாக விளங்குகின்றன.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மார்க்கம் காட்டித் தந்துள்ள காரணிகள், செயற்பாடுகள் மூலமே சுவனம் நுழைய முடியும்.
  2. சுவனம் செல்லும் காரணிகளில் இறையச்சம் போன்ற அல்லாஹ்வுடன் தொடர்பான காரணம், நற்பண்புகள் போன்ற அடியார்களுடன் தொடர்பான காரணம் என இரு வகையுண்டு.
  3. இறையச்சத்தின் சிறப்பும், அது சுவனம் நுழையக் காரணம் எனவும் இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
  4. பல வணக்கங்களை விட நற்குணம் சிறந்தது என்பதையும், அது சுவனம் நுழைவதற்கான காரணிகளில் ஒன்று என்பதையும் இந்நபிமொழி உணர்த்துகின்றது.
மேலதிக விபரங்களுக்கு